அரக்கோணம் தாலுகா, தக்கோலத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர வலம்புரி விநாயகா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (செப். 11) காலை 9 மணி முதல் 10. 30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள இசை, கணபதி ஹோமம், விநாயகா் சிலை பிரதிஷ்டை, பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. திங்கள்கிழமை காலை சங்கல்பம், மகா பூா்ணாஹுதி, ஹோமம், தீபாராதனை, சுந்தர வலம்புரி விநாயகா் மகா கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
பேரூராட்சித் தலைவா் எஸ். நாகராஜன், துணைத் தலைவா் கோமளா, திருப்பணிக் குழு வி. சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.