சென்னை நூலகத்தில் 3 மாதங்களாக கழிவறை நீர்க்கசிவு: ஒரு லட்சம் புத்தகங்கள் சேதமாகும் அபாயம்!

சென்னை அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் கழிவறையில் நீர்க்கசிவு காரணமாக சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகத்தின் கழிவறையில் கசிவு காரணமாக தேங்கியுள்ள நீர். 
சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகத்தின் கழிவறையில் கசிவு காரணமாக தேங்கியுள்ள நீர். 

சென்னை அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் கழிவறையில் நீர்க்கசிவு காரணமாக சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை அண்ணாசாலையில் 56 ஆண்டுகள் பழமையான தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம் உள்ளது. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆனால் இந்த நூலகம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றிக் கிடக்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக முதல் தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறி புத்தகங்கள் நனைந்து சேதமடைவதாக நூலக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

37 லட்ச ரூபாய் செலவில் நூலகத்தை சீரமைக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் கூறும் அவர்கள், தொடர்ந்து நீர் கசிந்து கொண்டிருந்தால் புத்தகங்களுக்கு மட்டுமல்ல, கட்டடத்திற்கும் சேதம் ஏற்படும் என்று கூறுகின்றனர். 

கழிவறையிலிருந்து வரும் தண்ணீரை, நூலக ஊழியர்கள் அவ்வப்போது ஒரு வாளியைக் கொண்டு நீரை சேகரித்து அகற்றி வருகின்றனர். 

சென்னை மெட்ரோ ரயில் பணிகளின்போது, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் உள்ள கழிவறைகளுக்கான தொட்டி மூடப்பட்டதால் அப்போதிருந்தே இந்த பிரச்னை இருப்பதாகவும் சமீபமாக மழைக்காலங்களில் இதன் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தபிறகு இவை சரிசெய்யப்படும் என்று ஊழியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

நூலகத் துறை அதிகாரிகள் இதுகுறித்து, 'நூலகத்தில் நீர்க்கசிவு குறித்து இதுவரை எங்களுக்குத் தெரியாது. ஆனால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வின்போது, இந்த நூலகத்தைப் புதுப்பித்து விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு கூறியுள்ளார்' என்று தெரிவித்தனர். 

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக கழிவறையில் இருந்து நீர்க் கசிவதாகவும் பல ஆண்டுகளாக நூலகத்தில் எந்த பராமரிப்பும் இல்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com