

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் - 2 வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு ரயில் விகாஸ் நிகாம் என்ற நிறுவனத்துடன் ரூ.4,058 கோடிக்கு மூன்று ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கீழ்ப்பாக்கம் மெட்ரோவில் இருந்து தரமணி வரை 12 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.