
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து சான்றிதழ் பெற்ற 3 பெண்களை வாழ்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயில்வோருக்கு சான்று வழங்குகிறது.
அந்த வகையில் 2022-23 ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அர்ச்சகரான 3 பெண்களை வாழ்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை!
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...' என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...