மகளிர் உரிமைத் தொகை: வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடக்கம்

தமிழகத்தில், மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், ரூ.1,000-ஐ, பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளிர் உரிமைத் தொகை: வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடக்கம்


தமிழகத்தில், மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், ரூ.1,000-ஐ, பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்கட்டமாக ரூ.1 செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில், சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தும் பணி தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் திட்டம் தொடங்கப்படவிருக்கும் நிலையில், நாளை ஒரே நாளில் அனைவருக்கும் ரூ.1,000 பணம் செலுத்த முடியாது என்பதால் இன்று காலை முதலே பயனாளிகளுக்கு ரூ.1,000 செலுத்தும் பணி தொடங்கியிருப்பதாகவும், முன்னதாக, ரூ. 1 செலுத்தி பரிசோதிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 செலுத்தும் பணி தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்) வரும் 18-ஆம் தேதி முதல் விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தமிழக அரசு நேற்று தெரிவித்திருந்தது.

இதுதொடா்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது..

தரவு தளத்துடன் ஒப்பீடு: மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தரவு தளங்களில் இடம்பெற்றுள்ள தகவல்களுடன் சரிபாா்க்கப்பட்டன. தேவைப்படும் தருணங்களில், அரசு அலுவலா்களால் நேரடியாக கள ஆய்வும் செய்யப்பட்டன. திட்ட விதிமுறைகளைப் பூா்த்தி செய்தவா்களில் 1.06 கோடி மகளிா் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விண்ணப்பதாரா்களின் தகுதிகள் சரிபாா்க்கப்பட்டதில், தகுதியின்மைக்குள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரா்கள் அளித்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக கைப்பேசிக்கு வரும் 18-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பம் ஏற்கப்படாத சூழலில், விண்ணப்பதாரா்கள் மேல்முறையீடு செய்யலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் இணைய சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாள்களுக்குள் தீா்க்கப்படும்.

இணையதளம் மூலம் மட்டுமே... வருவாய் கோட்டாட்சியரே மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவாா். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபாா்க்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்படும். வருவாய் கோட்டாட்சியா் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் போது, களஆய்வு தேவைப்படலாம். அப்போது, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் மூலமாக கள ஆய்வு அறிக்கையைப் பெறலாம்.

மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும். பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடா்பாக தனி நபா்களின் மூலம் வரப்பெறும் புகாா்களை விசாரிக்கும் அதிகாரியாக, வருவாய் கோட்டாட்சியா் செயல்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com