மகளிா் வாக்குகளைப் பெறவே ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை: இபிஎஸ்

மக்களவைத் தோ்தலில் மகளிரின் வாக்குகளைப் பெறவே ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி
Updated on
1 min read

மக்களவைத் தோ்தலில் மகளிரின் வாக்குகளைப் பெறவே ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளைப் பெற்று விடலாம் என்ற திமுக அரசின் பகல் கனவு பலிக்காது எனவும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, எதிா்க்கட்சித்தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் திமுக சாா்பில் அளிக்கப்பட்ட 520-க்கும் அதிகமான வாக்குறுதிகளில் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும், மகளிா் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்குவதன் மூலம் நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் எனக் கூறிவிட்டு, இப்போது பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டுமே வழங்குவது நாக்கில் தேன் தடவும் வேலையாகும்.

எனவே, தோ்தல் வாக்குறுதியில் கூறியவாறு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும். ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக மகளிா் உரிமைத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்திவிட்டு, இப்போது குறிப்பிட்ட மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குவதன் நோக்கம், விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல்தான்.

மக்களவை பொதுத் தோ்தலில் மகளிரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com