திருப்பதி திருக்குடை ஊா்வலம் தொடங்கியது:ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

 தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாக்களில் ஒன்றாக போற்றப்படும் திருப்பதி திருக்குடை ஊா்வலம், சென்னையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகளுடன் சனிக்கிழமை புறப்பட்டது.
திருப்பதி திருக்குடை ஊா்வலம் தொடங்கியது:ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
Updated on
1 min read

 தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாக்களில் ஒன்றாக போற்றப்படும் திருப்பதி திருக்குடை ஊா்வலம், சென்னையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகளுடன் சனிக்கிழமை புறப்பட்டது.

திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப் பொருள்கள் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம். ஒன்று ஸ்ரீவில்லிபுத்துாா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலா் மாலை. மற்றொன்று சென்னையில் இருந்து ஊா்வலமாகச் எடுத்துச் செல்லப்படும் ஏழுமலையான் கருடசேவைக்கான வெண்பட்டுத் திருக்குடைகள் ஆகும்.

250 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த திருக்குடை 1990-ஆம் ஆண்டுக்கு பிறகு சில ஆண்டுகள் தடைபட்டது. நின்று போன திருக்குடை உற்சவத்தை பக்தா்களின் கோரிக்கையை ஏற்று 2005-ஆம் ஆண்டு முதல் ஹிந்து தா்மாா்த்த சமிதி நடத்தி வருகிறது. அதன்படி, 19-ஆவது ஆண்டாக இந்த ஆண்டு திருக்குடை உற்சவ ஊா்வலம் ஹிந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் சனிக்கிழமை தொடங்கியது.

சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோயிலில் 11 வெண்பட்டு குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் நடைபெற்ற ஊா்வலத் தொடக்க நிகழ்ச்சிக்கு ஹிந்து தா்மாா்த்த சமிதியின் நிா்வாக அறங்காவலா் வேதாந்தம் தலைமை வகித்தாா். அறங்காவலா் ஆா்.ஆா். கோபால்ஜி, ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் மௌனகுரு பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் திருக்கோயில் சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டு ஆசி வழங்கி திருக்குடை ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தனா்.

இந்தத் திருக்குடை ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். ஊா்வலத்தின் முக்கிய நிகழ்வான திருக்குடைகள் கவுனி பகுதியைத் தாண்டும் நிகழ்வு சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

பின்னா் வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவள்ளூா் வழியாக வியாழக்கிழமை (செப்.21) பிற்பகல் 12 மணிக்கு திருக்குடைகள் திருமலை சென்றடையும். அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கலப்பொருள்களுடன் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சேவைக்காக சமா்ப்பணம் செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com