
தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி வேலூரில் அவரின் திருவுருவ படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வேலூருக்கு வருகை புரிந்தார்.
வேலூர் அண்ணா சாலையில், வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மத்திய மாவட்ட அலுவலகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீண்டாமைக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக திமுகவின் பவள விழாவையொட்டி திமுக கொடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.