சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!

சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 
சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!

சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 

இந்திய ரயில்வே துறை சாா்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை இடைய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக சென்னை- நெல்லை இடையே வருகிற செப். 24-ஆம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைக்கிறார். 

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் விரைவு முதல் கட்டமாக திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். 

நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் தினந்தோறும் நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையைச் சென்றடையும். பின்னா் அங்கிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை வந்தடையும். முதற்கட்டமாக 8 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. சென்னையில்  இருந்து நெல்லைக்கு சோதனை முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

இதன்படி ரயில் திருச்சி, மதுரை, விருதுநகரைக் கடந்து வெற்றிகரமாக திருநெல்வேலியை வந்தடைந்தது. இதன் மூலமாக சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com