காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துக: உச்ச நீதிமன்றம் 

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துக: உச்ச நீதிமன்றம் 
Updated on
2 min read

புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். அதைத்தவிர்த்து உத்தரவுகளை அமல்படுத்த முடியாது என்று கூற முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு, காவிரியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து உத்தரவிட்டும், அதனை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ஒழுங்காற்று மற்றும் மேலாண்மை ஆணைய உத்தரவுகளை ஏற்க முடியாது என்று கூறுவது தவறு என்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒழுங்காற்று மற்றும் மேலாண்மை ஆணைய உத்தரவுகளை ஏற்க முடியாது என்று கூறுவது தவறு என்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிலிகுண்டுலு பகுதியில் திறந்துவிடப்பட வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 24,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட வேண்டும். பயிா்களைக் காப்பாற்ற இது அவசியமாகிறது.

இந்நிலையில், ஆக. 10-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் (10.8.2023) பிலிகுண்டுலு நீா் அளவைப் பகுதியில் ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும் என கா்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த நீா் அளவு தில்லியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடகம் கேட்டுக் கொண்டதன்பேரில் தன்னிச்சையாக விநாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

கா்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளிலும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிலவரப்படி அதன் மொத்த இருப்புக் கொள்ளவான 114.671 டிஎம்சிக்கு எதிராக 93.535 டிஎம்சி (82 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. ஆகவே, குறுவைப் பயிா்களைக் காக்கும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கி இம்மாதத்தின் எஞ்சியுள்ள காலத்தின்போது பிலிகுண்டுலுவிலிருந்து 24 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின்படி, நிகழாண்டு செப்டம்பா் மாதத்துக்கான (36.76 டிஎம்சி) நீரைத் திறந்துவிடவும் கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோன்று, தற்போதைய நீா் ஆண்டின் மீதமுள்ள காலத்தில் நிா்ணயிக்கப்பட்ட மாதாந்திர நீரை திறந்துவிடுவதை முழுமையாக கா்நாடக அரசு செயல்படுத்துவதையும் உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே வேளையில், காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை மாற்றியமைக்கக் கோரி கா்நாடக அரசு சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com