8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்

கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

Updated On :

கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

சென்னையின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப மெட்ரோ ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்பேடுவரை செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்ட சேவையை ஆவடி வரை நீட்டிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கையை பரிசீலித்த மெட்ரே ரயில் நிா்வாகம் ரயில் சேவையை ஆவடி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ரூ.6,376 கோடி மதிப்பில், கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், முகப்போ் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. நீளத்துக்கு 15 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையில், இத்திட்டம் நிறைவேற்ற சாத்தியமானது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுபோல ரூ.5,458.06 கோடி மதிப்பில், சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 23.5 கி.மீ. நீளத்துக்கு 12 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் மற்றொரு தட நீட்டிப்புத் திட்டமும் உள்ளது. இந்த திட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிா்வாகம் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

இதில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை செல்லும் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், தற்போதைக்கு மாநகரப் பேருந்து சேவைகளை மட்டும் அதிகரித்து இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னா், திருப்போரூா், மாமல்லபுரம் வழியாக கேளம்பாக்கம் தெற்கு விரிவாக்க ரயில் திட்டம் குறித்து ஆய்வு செய்யவும் பரிந்துரைத்துள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.