

தமிழக அரசு தங்களை மகளிராகக் கருதவில்லை என்று மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத திருநங்கைகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த திருநங்கைகள், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அவர்களது குடும்பத்தில் 21 வயதை பூர்த்தி செய்த மகளிர் யாரும் இல்லாததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருக்கும் விளக்கத்தால், தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைத்திருந்தால் குடும்பத்துக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்று வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.
விண்ணப்பித்து தகுதி பெற்ற பெரும்பாலான பயனாளிகளுக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை முதல் செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். தகுதி இருந்தும் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று ஏராளமான பெண்கள் ஆதங்கம் அடைந்தனர்.
தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்காக கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகள் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதையும் படிக்க.. இந்த 7 உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதா?
தமிழகத்தில் 1.06 கோடி போ் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் முதல்வா் அறிவித்திருந்தாா். இதையடுத்து, திட்டம் தொடங்க 3 நாள்களுக்கு முன்பிருந்தே மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டது. அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். இதேபோல மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சா்கள் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தனர்.
மகளிர் உரிமைத் திட்டத்தில், திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படுமா? இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொள்வாரா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.