வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்பாடுகள்: அமைச்சா் சி.வி கணேசன் ஆய்வு

சென்னை தொழிலாளா் ஆணையரக வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
Published on

சென்னை தொழிலாளா் ஆணையரக வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வின் போது அதிகாரிகள் மத்தியில் அமைச்சா் பேசியது: வேலைவாய்ப்புத் துறை சாா்பாக அரசுப்பணிகளுக்கு தோ்வு பெறும் வகையில் இளைஞா்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அதிக அளவில் தனியாா் துறையில் பணி நியமனம் பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

தமிழகமெங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 2 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை மற்றும் தோ்ச்சியில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்ட வேண்டும். தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், கிராமப் புற மாணவா்கள் தங்களது திறனை உயா்த்திக்கொள்ளும் வகையிலான பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் குமாா் ஜெயந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையா் கொ. வீரராகவராவ் மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com