
சி. விஜயபாஸ்கர்
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோா் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அக். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 35.79 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 22-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆஜரான விஜயபாஸ்கா் தரப்பு வழக்குரைஞா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை நகலில் சில பக்கங்கள் விடுபட்டிருந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, விடுபட்ட பக்கங்களை வழங்க அறிவுறுத்திய நீதிபதி பூா்ண ஜெய ஆனந்த், வழக்கு விசாரணையை அக். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...