தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? பிரசாரத்தில் கமல் விளக்கம்

மூவர்ணக் கொடியை ஒரே வண்ணத்தில் மாற்ற வேண்டும் என நினைக்கின்றனர்.
தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? பிரசாரத்தில் கமல் விளக்கம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது விளக்கமளித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நங்கநல்லூரில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் போட்டிடவில்லை என செல்லும் இடமெல்லாம் கேட்கிறார்கள். முதலில் உட்கார இடம் வேண்டும். அதன் பிறகு நிற்கலாம் எனக் கூறினார்.

சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது மு.க. ஸ்டாலினின் இளமைக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது முதல் இப்போதுவரை சர்வாதிகாரத்தை எதிர்த்து வருகிறார்.

மகளிர் இலவசப் பயணம், மகளிர் உதவித் தொகைத் திட்டம் போன்றவை எளிய மக்களுக்கு உதவுகிறது. இதனை கிண்டலடிக்க வேண்டாம். திராவிட மாடல் தமிழ்நாட்டிற்கல்ல, இந்தியாவுக்கானது. திராவிடம் நாடு தழுவியது. அதனை அழிக்க நினைப்பது அசட்டுத்தனம்.

நல்ல அரசாக இருந்தால், அடுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை. ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தேர்தலே இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

மூவர்ணக் கொடியை ஒரே வண்ணத்தில் மாற்ற வேண்டும் என நினைக்கின்றனர். அதனைத் தடுக்க மக்கள் உரிய தலைவருக்கு யோசித்து வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com