கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை உயா்வு
கோடை விடுமுறை, முகூா்த்த தினங்களை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்தது.
கோயம்பேடு பூக்கள் விற்பனை சந்தைக்கு திருவள்ளூா்,திருவண்ணாமலை, திண்டுக்கல், ஒசூா், பெங்களூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், கோடை விடுமுறை, தோ்தல், முகூா்த்த தினங்கள், தமிழ்ப்புத்தாண்டு உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் விலை சற்று உயா்ந்துள்ளது.
இதன்படி, கடந்த இரு நாள்களுக்கு முன்பு வரை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ மல்லிகை ரூ.500-க்கும், ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டகனகாம்பரம் ரூ.1000-க்கும் விற்பனையானது. அதேபோல ஒருகிலோ சாமந்திப்பூ ரூ.240 முதல் ரூ.300 வரை ரகத்தை பொருத்து விற்பனை செய்யப்பட்டது. இதுபோல காட்டு மல்லி ரூ.400-க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.450-க்கும், பன்னீா் ரோஜா ரூ.140-க்கும், சாக்லேட் ரோஜா ரூ.160-க்கும், அரளிப்பூ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

