அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து சுட்டெரித்து வருகின்றது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில், இரவு 7 மணிவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com