மெரினா அருகே சுறா நடமாட்டம்?

கோப்புப்படம்
கோப்புப்படம்

மெரினா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை சுறா தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையை சேர்ந்த மணிமாறன்(வயது 25) என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் மெரினா கடற்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கரைக்கு 200 மீட்டர் தொலைவில் மீன் கூட்டங்களை கண்டவுடன் கடலுக்குள் சென்று வலையை வீச முயற்சித்துள்ளார்.

அப்போது, மணிமாறனின் காலை சுறா ஒன்று கடித்ததாகவும் சுதாரித்துக் கொண்ட அவர், உடனடியாக கரைக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளார்.

இடது குதிங்காலில் சுறா கடித்ததில் காயம் ஏற்பட்ட நிலையில், கைகளால் நீந்தி கரைக்கு திரும்பிய மணிமாறனை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் நலன் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், மெரினா கடற்கரைக்கு அருகே சுறா மீன்களை காண்பது மிகவும் அரிதான ஒன்று எனவும், கடலில் நீச்சலடித்து பழக்கமுடையவர் என்பதால் மணிமாறன் பிழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசிடம் வலியுறுத்தியதாக கூறிய அவர், நொச்சிக்குப்பம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை கடற்கரை பகுதிகளில் சுமார் 20 சுறாக்கள் காணபட்டன. அவை அனைத்தும் தற்போது கிழக்கு கடல் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com