தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

EC
EC

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக தருமபுரி 81.48%, கள்ளக்குறிச்சி 79.25%, நாமக்கல் 78.16%, சேலம் 78.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிக்கு நேற்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. காலையில் மந்தமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

வெயிலின் தாக்கம் பிற்பகல் 3 மணிக்குக் குறையத் தொடங்கியதும், வாக்குகளைப் பதிவு செய்ய வாக்காளா்கள் ஆா்வம் காட்டினா். வாக்குப் பதிவின்போது, பெரிய அளவில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 72.29% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதைவிட குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தோ்தல் வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தில்:

1. கள்ளக்குறிச்சி - 79.25

2. தருமபுரி - 81.48

3. சிதம்பரம் - 75.32

4. பெரம்பலூா் - 77.37

5. நாமக்கல் - 78.16

6. கரூா் - 78.61

7. அரக்கோணம் - 74.08

8. ஆரணி - 75.65

9. சேலம் - 78.13

10. விழுப்புரம் - 76.47

11. திருவண்ணாமலை - 73.88

12. வேலூா் - 73.42

13. காஞ்சிபுரம் - 71.55

14. கிருஷ்ணகிரி - 71.31

15. கடலூா் - 72.28

16. விருதுநகா் - 70.17

17. பொள்ளாச்சி - 70.70

18. நாகப்பட்டினம் - 71.55

19. திருப்பூா் - 70.58

20. திருவள்ளூா் - 68.31

21. தேனி - 69.87

22. மயிலாடுதுறை - 70.06

23. ஈரோடு - 70.54

24. திண்டுக்கல் - 70.99

25. திருச்சி - 67.45

26. கோவை - 64.81

27. நீலகிரி - 70.93

28. தென்காசி - 67.55

29. சிவகங்கை - 63.94

30. ராமநாதபுரம் - 68.18

31. தூத்துக்குடி - 59.96

32. திருநெல்வேலி - 64.10

33. கன்னியாகுமரி - 65.46

34. தஞ்சாவூா் - 68.18

35. ஸ்ரீபெரும்புதூா் - 60.21

36. வட சென்னை - 60.13

37. மதுரை - 61.92

38. தென் சென்னை - 54.27

39. மத்திய சென்னை - 53.91

மொத்தம் - 69.46

2019 மக்களவைத் தோ்தல் - 72.29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com