மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

தஞ்சாவூர் பெரியகோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. தேரோட்டம் நடக்கும் தெருக்களின் ஓரத்தில் இருந்த மின்கம்பங்களில், தேரின் அலங்கார பந்தல்கள் சிக்கியதால் தோரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேரோட்டம் தொடங்கிய போதே அலங்காரப் பந்தல் வலது புறத்தில் உள்ள கடையின் பெயர் பலகையில் சிக்கியதால், புறப்படுவதில் கால் மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்
பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோயில் அருகே சென்றபோது, வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் மீண்டும் சிக்கியது. இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட பிறகு தேர் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது.

ஆனால் அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் சிக்கியதால் மீண்டும் தேர் நின்றது.

மின் கம்பங்களில் சிக்கி தேர் அடிக்கடி நின்றதால், அலங்காரப் பந்தலின் அகலம் குறைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேரோட்டம் தாமதமாகும் சூழல் நிலவுகிறது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப். 6 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இதில், 15 ஆம் திருநாளான சனிக்கிழமை காலை திருத்தேரோட்டத்தையொட்டி, கோயிலில் காலை ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.

இதைத்தொடர்ந்து, காலை 7.15 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் தொடங்கப்பட்டது. திருத்தேரின் அலங்கார பந்தல்கள் மின்கம்பங்களில் சிக்கியதால் தேரோட்டம் தாமதமாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com