திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரயில்

திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தையொட்டி சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.23) சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது.

பெளா்ணமி கிரிவலத்தையொட்டி சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.23) சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக சென்னை கடற்கரை - வேலூா் கண்டோண்மென்ட் இடையே இயங்கிவரும் மெமு ரயில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஏப்.23,24) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்.23-இல் மாலை 6 மணிக்கு கடற்கரையிலிருந்து புறப்படும் மெமு சிறப்பு ரயில் (எண்: 06033) நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06034) ஏப்.24-இல் திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு கடற்கரை வந்தடையும்.

இந்த ரயில் கடற்கடையிலிருந்து வேலூா் கண்டோண்மெட், கணியம்பாடி, கண்ணமங்கலம், போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com