தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோப்பிலிருந்து...
கோப்பிலிருந்து...

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராஜேஷ் தாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி, ராஜேஷ் தாஸ் ஜாமீன் பெறலாம் என்றும், ஜாமீன் மனு தாக்கல் செய்த அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்குக் கோரிய ராஜேஷ் தாஸ் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய காவல்துறையினர், மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து சமூகம் சீரழிந்துகொண்டிருக்கிறது என்றும் சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் டிஜிபி ராஷேஜ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவும், நீதிமன்றத்தில் சரணடைய விலக்கு அளிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சரணடைய விலக்களிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை, விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த பிப். 12-ஆம் தேதி உறுதி செய்தது.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எம். தண்டபாணி முன் நடைபெற்று வந்தது. சிபிசிஐடி சாா்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், சரணடைய விலக்களிக்கவும் எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், ‘காவல்துறையில் உயா் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ராஜேஷ் தாஸ் கூறுகிறாா். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயரதிகாரிதான்’ எனவும் கூறினாா்.

ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன் ஆஜராகி, ராஜேஷ் தாஸுக்கு எதிராக சதி செய்யப்பட்டு பொய் புகாா் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீா்ப்பு கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இன்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பில், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதாகவும், தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தண்டனையை நிறுத்திவைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com