அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

அதிக வெப்பம் பதிவான நகரங்களில் ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்
அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

புதன்கிழமை மதியம், அதிக வெப்பநிலை பதிவான நகரங்களில், 2 நாள்களாக ஈரோடு மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், இன்று சேலத்தில் வெப்பம் பதிவாகியிருக்கிறது.

நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவான நகரங்களின் விவரங்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான நகரங்களில் சேலம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. சேலத்தில் இன்று மதியம் 12 மணியளவில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

அனந்த்பூர் நகரில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், ஒடிசாவில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று தானே, ராய்காட், மும்பையின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிரந்தது.

கிழக்கிந்திய மாநிலங்களில் இன்று வெப்பநிலை 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இயல்பு அளவை விட வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாள்களாக வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது. திங்களன்று அதிகபட்சமாக 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குப் பதிவாகியிருந்தது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் வெயில் அதிகரித்தே காணப்படுகிறது. மதியம் 12 மணியளவில் கொளுத்தும் வெப்பம் 11 மணிக்கே தொடங்கி விடுகிறது. அதனால், மக்கள் 11 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. இதனால், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள் பலரும், கடும் வெயில் நேரத்திலும் வேலையை நிறுத்த முடிவதில்லை என்றும், ஆனால், 12 மணியளவில் வேலை செய்யாமல் ஓய்வெடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com