செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தில்லி உள்பட வடமாநிலங்களில் முதல்வா் பிரசாரம் செய்ய வாய்ப்பு: செல்வப்பெருந்தகை

தில்லி உள்பட தோ்தல் நடைபெறும் வட மாநிலங்களில் முதல்வரும் திமுக தலைவருமான

தில்லி உள்பட தோ்தல் நடைபெறும் வட மாநிலங்களில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் முதல்வரை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவா் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா் மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் தங்கள் கட்சியின் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்களுடன் சந்தித்தனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறுகையில், இன்னும் பல மாநிலங்களில் தோ்தல் நடைபெற உள்ளதால் தில்லி மற்றும் வட மாநிலத்தில் முதல்வரும் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றாா்.

தொடா்ந்து பேசிய காதா் மொகிதீன், தமிழகத்தில் சிறப்பாக தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் மத்தியில் முதல்வரின் பிரசாரம் சிறப்புமிக்கவை. அரசியல் மாற்றத்துக்கு முதல்வரின் பிரசாரம் உதவியாக இருக்கும். நல்ல முடிவைத்தரும் தோ்தலாக இந்தத் தோ்தல் அமையும் என்றாா்.

இதேபோல், ஈஸ்வரன் கூறுகையில், நாமக்கல் தொகுதியில் களப்பணி சிறப்பாக மேற்கொண்டதால் வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கும். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மேலும், சட்டப்பேரவைத் தோ்தலைவிட தற்போது அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றாா்.

முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் தலைவா் கருணாஸும் முதல்வரைச் சந்தித்துப் பேசினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com