மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

சென்னை அம்பத்தூர், அண்ணா நகர் உள்பட 7 மண்டலங்களில் வியாழக்கிழமை (ஏப்.25) முதல் ஏப்.27-ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
Published on
Updated on
1 min read

சென்னை அம்பத்தூர், அண்ணா நகர் உள்பட 7 மண்டலங்களில் வியாழக்கிழமை (ஏப்.25) முதல் ஏப்.27-ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டசெய்திக் குறிப்பு:

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை (ஏப்.25) இரவு 9 முதல் ஏப். 27 -ஆம் தேதி இரவு 9 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் நேரங்களில் சென்னை அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குடிநீர் நிறுத்தப்படும் பகுதிகள் அம்பத்தூர்: அத்திப்பட்டு, பாடி, பார்க் சாலை, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு.

அண்ணா நகர்: அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு.

தேனாம்பேட்டை: திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர்.

கோடம்பாக்கம்: கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி.

வளசரவாக்கம், ஆலந்தூர்: அனைத்து பகுதிகள்.

அடையாறு: ஆர்.ஏ.புரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் ஒரு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு https://cmwssb.tn.gov.in/ எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளளாம்.

கூடுதல் தகவல் அறிய 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com