தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!
கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழையும் பெய்துள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் 01-ம் தேதி முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் அரியலூரில் 1.9 மி.மீ மழையும், திண்டுக்கல்லில் 12.7 மி.மீ, ஈரோட்டில் 4.5 ஆகவும், கன்னியாகுமரியில் 55.5 ஆகவும், காரைக்காலில் 2.0 ஆகவும், மதுரையில் 16.8 ஆகவும், நாகப்பட்டினத்தில் 17.0 ஆகவும், அதிகபட்சமாக நீலகிரியில் 30.7 மி.மீட்டரும், நெல்லையில் 69.7 ஆகவும் தமிழகம் மற்றும் புதுவையில் 9.4 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.
பொதுவாக கோடைக்கால பருவமழை இயல்பான அளவு 53.3 மி.மீ பதிவாக வேண்டிய நிலையில் 9.4 மி.மீ அளவிலான மழையே பதிவாகியுள்ளது. இது இயல்பிலிருந்து 83 சதவீத மழை குறைவாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...