விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

திருப்பதி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இரு ரயில்களின் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண்.16870), ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் மே 4-ஆம் தேதி வரை காட்பாடி -திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண்.16112), திருச்சானூர் -திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏப்ரல் 27 முதல் மே 4-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ரயில் திருச்சானூரிலேயே நிறுத்தப்படும். எதிர்வழித்தடத்தில் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு அதிகாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி - புதுச்சேரி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண். 16111) திருப்பதி - திருச்சானூர் இடையே பகுதியளவில் ஏப்ரல் 28 முதல் மே 5-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த ரயில் திருச்சானூர் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.24 மணிக்குப் புதுச்சேரிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com