சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

கோடை வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் குடிநீா் தேவை அதிகரித்து வருகிறது. மாா்ச் 28-இல் ஒரே நாளில் அதிகபட்சமாக 1,071.4 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் சென்னையில் தினமும் 1,500 மில்லியன் லிட்டா் வரை குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நெம்மேலி, மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமும் சென்னைவாசிகளுக்கு தினமும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய முடியும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளில் 57 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com