பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே” என புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்

தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”

“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!

எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!”

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாவேந்தர் பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com