
சென்னையில் உள்ள ‘5 நட்சத்திர ஹோட்டல்களின்’ மதுபானக்கூட உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வந்த ‘5 நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றில், விதிமுறைகளுக்கு புறம்பாக வெளி நபர்களை மது அருந்த அனுமதிப்பது, மதுபானங்களை விநியோகம் செய்வது உள்பட சட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக எழுந்த புகாரையடுத்து அந்த ஹோட்டல்களின் மதுபானக்கூட உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மேற்கண்ட ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.