
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? என்கிற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து ஜி.கே.எம். காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்கிடையே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது. மழைப்பொழிவு எந்தளவில் இருந்தாலும் தமிழக அரசு அதை எதிர்கொள்ளும்.
பருவ மழைக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.
உதயநிதி துணை முதல்வராவது குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இப்போதைக்கு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி இல்லை என முதல்வர் ஸ்டாலின் சூசகமாக பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.