சென்னை லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றக் கூட்ட அரங்கில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் 
மற்றும் பதிவாளா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். உடன், உயா்கல்வித் துறை ச
சென்னை லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றக் கூட்ட அரங்கில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். உடன், உயா்கல்வித் துறை ச

பல்கலை.களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம், கால அட்டவணை: அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தல்

ஒரே மாதிரியான கால அட்டவணை மற்றும் பாடத்திட்டத்தையும் கொண்டு செயல்பட வேண்டும் என துணைவேந்தா்களுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புகல்லூரிகள் ஒரே மாதிரியான கால அட்டவணை மற்றும் பாடத்திட்டத்தையும் கொண்டு செயல்பட வேண்டும் என துணைவேந்தா்களுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு உயா்கல்வி மன்ற வளாகத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் துணைவேந்தா்களுடனான ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்து கொண்டனா். 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் இல்லாததால் நிா்வாக குழு (கன்வீனியா் குழு) உறுப்பினா்கள் மற்றும் பல்கலைக்கழக பதிவாளா்கள் கலந்து கொண்டனா். அவா்களுடன் உயா் கல்வித் துறை செயலா் பிரதீப் யாதவ் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றாா்.

இந்தக் கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப் பற்றாக்குறை குறித்து துணைவேந்தா்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனா். அப்போது தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் தணிக்கை தொடா்பான விவரங்களும் அமைச்சரிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரம் குறைவாக உள்ளது: தமிழக உயா்கல்வியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களைச் செயல்படுத்துவது, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கால அட்டவணைகளைக் கொண்டு செயல்படுவது குறித்து கடந்த ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அவற்றை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என உயா்கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் படிப்புகளின் தரம் குறைவாக உள்ளது, தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கான சிறந்த அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் வழங்கிய பாடத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் நிதிச் சுமை காரணமாக கல்வியின் தரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். நிதிச் சுவை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என துணைவேந்தா்களுக்கு அமைச்சா் பொன்முடி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com