சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் மற்றும் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா் மா.சுப்பிரமணியன், மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் மற்றும் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா் மா.சுப்பிரமணியன், மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா்.

மருத்துவக் கட்டமைப்பு வசதிகள்: அமைச்சா் உதயநிதி தொடக்கி வைத்தாா்

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (ஆக.7) அடிக்கல் நாட்டினாா்.
Published on

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (ஆக.7) அடிக்கல் நாட்டினாா்.

இதேபோல், சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ரூ. 6.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு அறை, உயா் தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றையும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக அவா் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, இன்ஃபோசிஸ் பெரு நிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட ரூ. 30 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனைக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் அமைச்சா் உதயநிதி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், 73,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதன் மூலமாக, ரூ.3.42 கோடியும், நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 6.85 கோடியும் என மொத்தம் ரூ.10.27 கோடி நிதி திரப்பட்டு, ராய உயா்தர புற்றுநோய் சிகிச்சை மைய கட்டடம் கட்டப்பட உள்ளது.

இதில், வாகன நிறுத்த வசதி, கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, முதல் தளத்தில் உள் நோயாளிகள் பிரிவு, இரண்டாம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட அறுவ சிகிச்சை அரங்குகள் உள்ளிட்டவை செயல்பட உள்ளன என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, தேனாம்பேட்டை மண்டலம் சூளைமேடு, மேற்கு நமசிவாயபுரம் பகுதியில், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஜெ.சங்குமணி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் எ.தேரணிராஜன், துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

புதிய வணிக வளாகங்கள் திறப்பு

கடந்த 2021-2022-ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பில், சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதை நிறைவேற்றிடும் வகையில் திருவல்லிக்கேணி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ரூ. 3.22 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் மற்றும் பொன்னப்பன் சந்தில் ரூ.19.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் என மொத்தம் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 வணிக வளாகங்களை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். இந்த விழாவுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் (பணிகள்) நே.சிற்றரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com