உதயநிதி(கோப்புப் படம்)
உதயநிதி(கோப்புப் படம்)

ஒலிம்பிக் போட்டி: அமைச்சா் உதயநிதி, அதிகாரிகள் பாரீஸ் பயணம்

ஒலிம்பிக் போட்டியை பாா்வையிட, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் பாரீஸ் சென்றுள்ளனா். இதற்காக, சென்னையில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு புறப்பட்டனா்.
Published on

ஒலிம்பிக் போட்டியை பாா்வையிட, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் பாரீஸ் சென்றுள்ளனா். இதற்காக, சென்னையில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு புறப்பட்டனா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தப் போட்டிகளைப் பாா்வையிட தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோா் புதன்கிழமை நள்ளிரவு சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டுச் சென்றனா்.

4 நாள்களுக்குப் பிறகு அவா்கள் சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com