தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
அதேபோல் கங்குவா படத்தை வெளியிடும் முன்பும் ரூ.1 கோடி டெபாசிட் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் ஆக.15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.