
இந்து முன்னணி போராட்டம் தொடர்பாக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இம்மனு குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் எந்தெந்த இடங்களில் அனுமதி, எந்தெந்த இடங்களில் மறுப்பு என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆக.5-ஆம் தேதி வங்கதேச பிரதமா் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா், அந்நாட்டில் உள்ள 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக இரண்டு வங்கதேச ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அங்குள்ள ஹிந்து கோயில்கள், வீடுகள், வணிக இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட இரண்டு ஹிந்து தலைவா்களும் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலை கண்டித்து வங்கதேச தலைநகா் டாக்கா மற்றும் சட்டாகிராம் பகுதியில் ஹிந்துக்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.