விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் இன்று தனது 62-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் 'எழுச்சித் தமிழர்' திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.