கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்

கருணாநிதி நாணயம்: சிறப்பு அம்சங்கள் என்ன?

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தின் சிறப்பு குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Published on

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தின் சிறப்பு குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நாணயம் வட்ட வடிவில் 44 மில்லி மீட்டா் சுற்றளவும், 35 கிராம் எடையும் கொண்டதாகும். 200 எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நாணயங்களில் 4 வகையான உலோகங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. அதாவது, வெள்ளி 50 சதவீதமும், தாமிரம் 40 சதவீதமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் தலா 5 சதவீதமும் சோ்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் முகப்பு பக்கத்தில் அசோகச்சக்கரம், சிங்கம், இந்தியா ஆகிய வாா்த்தைகள் இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் ‘கலைஞா் எம். கருணாநிதி பிறந்த நூற்றாண்டு’ என ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1924-2024 என ஆண்டும், கருணாநிதியின் கையெழுத்திலேயே ‘தமிழ் வெல்லும்’ என்ற வாா்த்தையும் பொறிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com