சென்னை: சென்னையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதல்வரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் உற்பத்தியையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.
இந்த நிறுவனங்கள் ரூ.17,616 கோடி முதலீட்டில் தங்களது ஆலைகளைத் தொடங்கவுள்ளன. இதனால், 65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.