தவெக கட்சிக் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு!

தவெக கட்சிக் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தவெக கட்சிக் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு!
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடிக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அஸ்ஸாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.

உண்மை இப்படி இருக்க, இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும்.

மேலும், தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com