வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.29) புயல் சின்னம் உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.29) புயல் சின்னம் உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (ஆக.29) முதல் செப்.3-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புயல் சின்னம்: இதற்கிடையே, வியாழக்கிழமை (ஆக.29) வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து தெற்கு ஒடிஸா, வடக்கு ஆந்திர கரையோரம் ஆக.30, 31 ஆகிய தேதிகளில் நிலவக்கூடும்.

இதன் காரணமாக சென்னையில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக்கடலிலும் ஆக.28 முதல் செப்.1 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com