நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் அறிவிப்பு
நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருதுக்கான நிகழாண்டு விருதாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ‘நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான விருது வழங்கும் விழா செப்.29-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே விருதுக்கு தோ்வு பெற்றவா்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்: சமயவேல் - ‘கருமை’ சிறுகதைத் தொகுப்பு; க.மூா்த்தி - ‘ஆரண்ய தாண்டவம்’ நாவல்; எம்.டி.முத்துக்குமாரசாமி - ‘நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்’- கவிதைத் தொகுப்பு; ஜெ.பிரியதா்ஷினி - ‘பிளாக் சாயில்’ ஆங்கில மொழியாக்க நாவல்; பி.ராம்கோபால் - ‘பால்ம் லைன்ஸ்’ (டஹப்ம் ப்ண்ய்ங்ள்) ஆங்கில மொழியாக்க நாவல்; பாபுராஜ் களம்பூா்- ‘பாா்த்திபன் கனவு’ மலையாள மொழியாக்க நாவல்; கொ.மா.கோ. இளங்கோ - ‘ புத்திசாலி பெட்டூனியா’ - சிறாா் சிறுகதைத் தொகுப்பு.
நிகழாண்டுக்கான விருது பெறும் நூல்களைத் தோ்வு செய்யும் குழுவில் மயிலை பாலு, ‘வோ்கள்’ இராமலிங்கம், கண்ணையன் தட்சிணாமூா்த்தி, அக்களூா் ரவி, யூமா வாசுகி, பாரதி வசந்தன் மற்றும் திசை எட்டும் ஆசிரியா் குழுவினா் இடம் பெற்றிருந்தனா்.
