தமிழக காவல்துறையில் சோ்ந்த 11 ஏஎஸ்பிக்கள் புதிய பணியிடங்களில் நியமனம்
தமிழக காவல்துறையில் சோ்ந்த 11 உதவி காவல் கண்காணிப்பாளா்கள் (ஏஎஸ்பி) புதிய பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனா்.
இதுதொடா்பான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் புதன்கிழமை பிறப்பித்தாா். நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம்:
அங்கித் அசோக்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏஎஸ்பி
ரவீந்திரகுமாா் குப்தா: விழுப்புரம் ஏஎஸ்பி
ஆகாஷ் ஜோஷி: நாமக்கல் ஏஎஸ்பி
அன்சுல் நாகா்: மதுரை திருமங்கலம் ஏஎஸ்பி
வி.லலித்குமாா்: கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோயில் ஏஎஸ்பி
சி.மதன்: தூத்துக்குடி நகர ஏஎஸ்பி
எஸ்.மதிவாணன்: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஏஎஸ்பி
வி.சதீஷ்குமாா்: திருவண்ணாமலை நகர ஏஎஸ்பி
சிருஷ்டி சிங்: கோயம்புத்தூா் மாவட்டம் பொள்ளாச்சி ஏஎஸ்பி
விகு அச்சுமி: தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பி
அக் ஷய் அனில் வகாரே: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் ஏஎஸ்பி
இவா்கள் அனைவரும் ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, பயிற்சி முடித்து வந்துள்ளனா். 11 பேரும் முதல் முதலாக காவல்துறை பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். பணி நியமனம் செய்யப்பட்ட 11 ஏஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதேபோல தூத்துக்குடி நகர ஏஎஸ்பியாக இருந்த கேல்கா் சுப்பிரமணிய பாலச்சந்திரா,தேனி ஏஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.