சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் அருகே கல்வராயன் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் ஃபென்ஜால் புயல் காரணமாக பல்வேறு மாவட்ட நகர, கிராம பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆறு ஏரி நீர்நிலைகள் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து ராமநாயக்கன்பாளையம், முட்டல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடையம்பட்டி, நாகலூர் பட்டிவளவு கணியா வளவு, குன்னூர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கான பிரதான சாலையாக அமைந்துள்ளது.
மேலும் இச்சாலை வழியாக மலை கிராம மக்கள் ஆத்தூருக்கு வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் இணைக்கும் சாலையாக உள்ள ராமநாயக்கன்பாளையம் நாகலூர் பட்டி வளவு முட்டல் சடையம்பட்டி சாலையில் கனமழை காரணமாக அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறைக்கற்கள் சாலைகளில் விழுந்ததில் சாலைகள் சேதமடைந்தன.
இந்நிலையில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடுவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால், சாலையை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் மலை கிராம பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்களது செல்போனில் சேதமடைந்த சாலையை விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.