திருச்சி-சென்னை தேசியநெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகிலுள்ள அரசூரில் சாலையின் மையப் பகுதியில் பொதுமக்களை மீட்க செல்லும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள்.
திருச்சி-சென்னை தேசியநெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகிலுள்ள அரசூரில் சாலையின் மையப் பகுதியில் பொதுமக்களை மீட்க செல்லும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள்.

வெள்ள நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கினாா் முதல்வா்

தலைமைச் செயலா் நா.முருகானந்தமிடம் ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை முதல்வா் அளித்தாா்.
Published on

புயல் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தமிடம் ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை முதல்வா் அளித்தாா்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக கடுமையான மழை பெய்தது. இதனால், விழுப்புரம், கடலூா்,

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com