அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரத்தில் இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஃபென்ஜால் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை எனக் கூறி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் கௌதமசிகாமணி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
அப்போது அமைச்சர் பொன்முடி காரைவிட்டு இறங்காமல் அங்கிருந்த மக்களுடன் பேசியதாகவும் இதனால் மக்கள் அவர் மீது சேற்றை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை வீசியதாக இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.