ராமதாஸ்
ராமதாஸ்

கல்லூரி சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு கூடாது: ராமதாஸ்

கல்லூரி சோ்க்கைக்கும் நுழைவுத் தோ்வை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
Published on

கல்லூரி சோ்க்கைக்கும் நுழைவுத் தோ்வை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயா்கல்வியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த இக்குழுவின் வரைவு அறிக்கையில், பிளஸ் 2 வகுப்பில் ஒரு பாடப் பிரிவை படித்தவா்கள், பட்டப்படிப்பில் வேறு பாடத்தை படிக்க வேண்டும் என்றால், அதற்கு நுழைவுத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தோ்வுகள் சமூகநீதிக்கு எதிரானவை என்பதால் அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com