விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!

சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!
Published on
Updated on
1 min read

சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.

புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலான 'ICONOCLAST' (ஐகானோக்ளாஸ்ட்) நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில் விசிக தலைவர் திருமாவளவன், சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே, விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 6) மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இரு தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து பல விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுதொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மேலும் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க, நூல் வெளியீட்டு விழாவில் விஜய் மட்டும் பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்ததாகவும் விஜய்யுடன் எந்த முரண்பாடும் இல்லை, அவருடன் எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறினார்.

இதையடுத்து விசிக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.