

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியாக, ‘முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு’ நடிகர் கார்த்தி நிவாரணம் வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ. 15 லட்சம் தொகையை அவர் வழங்கியுள்ளார்.
ஃபென்ஜால் புயலால் வட மாவட்டங்களில் வெள்ள நீா் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புயல் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
அதேபோல, விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.