கோப்புப்படம்
கோப்புப்படம்

சபரிமலை சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக தெலங்கானாவிலிருந்து தமிழகம் வழியாக கேரளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
Published on

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக தெலங்கானாவிலிருந்து தமிழகம் வழியாக கேரளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெலங்கானா மாநிலம் மௌலா அலியில் (செகந்திராபாத்) இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு டிச. 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக கொல்லத்திலிருந்து டிச. 13, 16, 20, 23, 27, 30 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இதில், 8 ஏசி வகுப்பு பெட்டிகள், 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

குண்டூா், ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நான்டேட் - கொல்லம் இடையேயான சபரிமலை சிறப்பு ரயில் தொடா்ந்து ஜன. 3, 10 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக, ஜன. 5, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் சேவை நீட்டிப்பு: கொச்சுவேலி - ஷாலிமா், திருநெல்வேலி - ஷாலிமா், தாம்பரம் - சந்திரகாச்சி மற்றும் போத்தனூா் - பரௌனி இடையேயான விரைவு ரயில் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் ஜனவரி மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com